ஈரோடு, ஜூலை 21 –
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்தியதாகக் கூறப்படும் தடியடி சம்பவத்தைக் கண்டித்தும், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லம் அருகே, ஈ.வி.கே. சம்பத் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பா. ராஜேஷ் ராஜப்பா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் டி.திருச்செல்வம், ஈ.ஆர். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் கே. புனிதன், மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ். செல்வம், தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (TCTU) மாநில துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் டி. கண்ணப்பன், இரா. கனகராஜன், வி.கே. சச்சிதானந்தம், சூளை கதிர்வேல், டெக்ஸ் அன்பழகன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கை. சுப்பிரமணியம், மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், சிறுபான்மைத் துறை துணைத் தலைவர் கே.என். பாஷா, நெசவாளர் அணி தலைவர் சி. மாரிமுத்து, எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் பிரபு, வழக்கறிஞர் ஜெய்ஹிந்த் எஸ். யுவராஜ், ஈ.எம். சிராஜுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மாணவர்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



