By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்

Last updated: July 17, 2026 6:29 pm
July 17, 2026
25 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 17 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து தரமானதாக முடிக்க வேண்டும் என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவர் முரசொலி எம்பி தலைமை தாங்கினார். இணை தலைவர் சுதா எம்பி, கல்யாண சுந்தரம் எம் பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் ரேவதி, எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், கோவி. செழியன், அண்ணாதுரை,
அசோக்குமார், துரை சந்திரசேகரன் விஜய் சரவணன், மேயர்கள் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, பயிற்சி கலெக்டர் சுபாஷ் கார்த்திக், துணை மேயர் தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முரசொலி எம்பி பேசுகையில்: வேளாண்மை, தோட்டக்கலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மின் வாரியம், ஊரக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், சுகாதாரத்துறை, மாவட்ட தொழில் மையம், உணவு பொருள் வழங்கல், சமூக பாதுகாப்பு திட்டம், சத்துணவு திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மேலாண்மை துறையின் தேசிய மேலாண்மை வளர்ச்சி திட்டங்கள், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், மண்வள அட்டை, பயிர்க் காப்பீடு திட்டம், தோட்டக் கலை துறையின் பிரதமர் நுண்ணீர் பாசன திட்டம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பள்ளி செல்லாத குழந்தைகள் நிலவரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து துறைகளும் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் களப் பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கும்பகோணம் கோட்டாட்சியர், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முரசொலி எம்பி பேசுகையில்: இந்த கூட்டம் நடத்துவது குறித்து 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும் பலர் வரவில்லை. வராத உயர் அதிகாரிகளுக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அடுத்த முறை உயர் அதிகாரிகள் வராவிட்டால் கூட்டத்தை நடத்த மாட்டோம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவண்ணாமலை, வேங்கிக் கால் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னை டாஸ்மாக் இயக்குநரகம் முற்றுகை போராட்டம்
தமிழ் நாட்டில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு சமூக ஆர்வலர் முதலமைச்சருக்கு மனு
அரசு பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு அருகே 60 வீடுகளுக்கு 5 மாதங்களாக குடிநீர் இல்லை: காலி குடங்களுடன் பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

July 30, 2026
18 Views
நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்
கன்னியாகுமரி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சியில் வாக்களித்த இலங்கை தமிழர்
பண்டித் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account