ஈரோடு, ஜூலை 6 –
ஈரோடு சூரம்பட்டி பஸ் நிலையம் அருகே வீ த லீடர்ஸ் சார்பில் போதைக்கு எதிரான உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அக்னி ராஜேஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் ரவீந்திரன், அண்ணாதுரை, சின்னதுரை, சின்னசாமி, ரமேஷ், மாணிக்கம், சக்தி, ஸ்ரீதர், கண்ணன், பிருந்தா, சரவணன், ராஜேந்திரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நான் என் வாழ்நாளில் ஒருபோதும் எவ்விதமான போதைப்பொருளையும் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்த மாட்டேன் போதையின் பிடியில் இருந்து என் குடும்பத்தையும் சுற்றுப்புறத்தையும் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து போதை இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கப்படுவேன். போதைக்கு எதிரான வலிமையான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க போராடுவன். இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.



