ஈரோடு, ஜூலை 4 –
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கேரளா பிரிவு இந்திய இயற்கை மற்றும் யோகா மருத்துவ பட்டதாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் போஸ்டர் பிரசென்டேசன் பிரிவில் டாக்டர் பிரணவ், விவேகா, ஜீவஹரிணி விக்னேஷ் டாக்டர் நூரி பேகம் மற்றும் நேஹா ஆகியோர் பாராட்டுப் பரிசைப் பெற்றனர்.
மேலும் அண்மையில் சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச ஒருங்கிணைந்த மருத்துவ அறிவியல் கருத்தரங்கில் ஈரோடு கொங்கு இயற்கை மருத்துவ மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவி ரத்னமால் ஆய்வுக் கட்டுரையை வழங்கி மூன்றாம் பரிசு வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தார்.
அதைத் தொடர்ந்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி நடத்திய யோகா போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் பங்கு பெற்று 10-ற்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றனர்.
இச்சாதனைகளைப் பாராட்டி, கல்லூரி தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் டாக்டர் பிரதாப் சிங், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால கல்வி மற்று ஆராய்ச்சித் துறைகளில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



