புதுக்கடை, ஜூன் 26 –
குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் காப்புக்காட்டில் நூல் வெளியீட்டு விழா தலைவர் லாசர் தலைமையில் நடந்தது. அனிதா றசல் வரவேற்றார். ஆலங்கோடு பகுதியை சேர்ந்த பள்ளி காவலர் மணி எழுதிய விவசாயி என்னும் நூலை ஞானதீபம் கல்லூரி தாளாளர் தாமஸ் ராஜ் வெளியிட தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் சிந்து குமார் பெற்றுக் கொண்டார்.
கவிஞர் ஞானாமிர்தம் கவி பாடினார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சூசைமிக்கேல், மார்த்தாண்டம் வித்யாஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் லாசர், பாரதிய படை வீர சங்கத் தலைவர் எலிசா, அவைத் தலைவர் குமரேசதாஸ், பொருளாளர் தமிழ்மாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணைச் செயலர் பாபு நன்றி கூறினார். துணைத் தலைவர் வின்சென்ட், பிலிப்போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



