கிருஷ்ணகிரி, ஜூன் 25 –
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக கட்சி சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளினை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இரத்த தான முகாம், மருத்துவ முகாம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் சிலம்பாட்டம் கழகத்தின் சார்பில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. தமிழர்களின் வீரத்தினை பறைச்சான்றும் விதமாக நடைபெற்ற இந்த சிலம்பம் போட்டியை தவெக மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற சிலப்பாட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் மெடல் ஆகியவற்றினை தவெக மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் வழங்கினார்.
மேலும் இதை போல கிருஷ்ணகிரி, வேட்டியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அப்போது மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் ஹரிஸ், மாவட்ட பொருளாளர் முருகேசன், வேப்பனம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்ட மகளீர் அணி தலைவி இந்திரா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமபிரியா, மாவட்ட மாவட்ட மாணவர் மாணவரணி அமைப்பாளர் அருள் குமார், மருத்துவர் அணி அமைப்பாளர் பார்த்திபன், நகர கழகம் ஹரிபிரசாந்த் மற்றும் தவெக நிர்வாகிகளான தென்னரசு, ஏஜாஸ் கோல்டன் சுரேஷ், வேலன், சங்கர், ஆனந்த் மற்றும் சிலம்பாட்ட பயிற்சியாளர்கள் குரு ராகவேந்திரன், சரவணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



