நாகர்கோவில், ஜூன் 22 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 582 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நியாயவிலைக்கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த சிறந்த விற்பனையாளர் மற்றும் எடையாளர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பிரதப் பணியாளர்களுக்கு வழங்கி கௌரவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பத்மபிரியா (நிலம்), துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



