களியக்காவிளை, ஜூன் 17 –
பாரம்பரிய சித்தவர்ம ஹீலர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஒரு வருட வர்ம பயிற்சி திற்பரப்பில் நடந்தது. இந்த பயிற்சியின் நிறைவு விழாவில் அசோஷியேசன் தலைவர் ராமச்சந்திரன் நாயர் தலைமை வகித்தார். வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம சுவாமி சிவாத்மானந்தஜி சித்த மருத்துவர்களுக்கு விருது வழங்கினார். சங்க பொருளாளர் மற்றும் படந்தாலுமூடு அனுக்கிரக சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனர் சுரேஷ் குமார் ஆசான் சித்த வர்மம் குறித்து பேசினார்.
தொடர்ந்து அசோஷியேஷன் செயலாளர் ஹரீஷ் வைத்தியர், பேராசிரியர் கணபதி, ராஜேஷ், ராம் ஆசான், ரப்பர் போர்டு துணை செயர்மேன் அனில்குமார் ஒய்வு பெற்ற டி. எஸ். எம் ஓ .ரோபர்ட் சிங், உள்ளிட்டோர் பேசினார்கள். தொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன். ரவி ஒருவருட பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் வர்ம கருத்தரங்கம், மூலிகை கண்காட்சி, புத்தக வெளியீடு, களரி விளையாட்டு, நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவர் சுரேஷ்குமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.



