By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரெயின்போ மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கான “அசண்ட்” சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ரெயின்போ மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கான “அசண்ட்” சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

ரெயின்போ மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கான “அசண்ட்” சிறப்பு மருத்துவ மையம் திறப்பு

Last updated: June 16, 2026 8:21 pm
June 16, 2026
36 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 16 –

குழந்தைகளுக்கு அதிநவீன மருத்துவ சேவையை அளிக்கும் விதமாக, சென்னை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை அசண்ட் (ACENT ) என்னும் பிறந்த குழந்தைகள் சிறுவர்களுக்கான செவித்திறன், சுவாசப் பாதை தூக்கக் குறைபாடுகளுக்கான சிறப்பு மருத்துவ மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இம்மையத்தின் அறிமுக விழாவில், பிரபல பின்னணிப் பாடகி சைந்தவி மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனையின் இ .என்.டி மூத்த நிபுணர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

குறிப்பாக, புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் சுவாசப் பாதையை மயக்க மருந்து கொடுக்காமல் பரிசோதிக்க, மிக மெல்லிய 1.2 மி.மீ குழந்தைகளுக்கான எண்டோஸ்கோப்புகளைப் பயன்படுத்தும் சென்னையின் முதல் மையம் அசண்ட் ஆகும்.

இந்த தொழில்நுட்பம், புறநோயாளிகள் பிரிவிலேயே மிகச் சிறிய சுவாசப் பாதைகளைக் கூட மருத்துவர்கள் பாதுகாப்பாக பரிசோதிக்க உதவுகிறது. இதனால் சிக்கலான இ.என்.டி பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடிகிறது.

இது குறித்து சென்னை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் குழுமத் தலைவர் குணசேகர் கூறுகையில், “எங்கள் மருத்துவமனையில், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களின் ஆதரவுடன் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சையை வழங்குவதே எங்களது முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்த “அசண்ட்” மையம் அறிமுகம் என்பது, குழந்தைகளுக்கு ஒரே இடத்தில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சையை வழங்க வேண்டும் எங்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது .
நோயைக் கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பதில் தொடங்கி, குணமடைவது மற்றும் மறுவாழ்வு அளிப்பது வரை, இந்த மையத்தின் ஒவ்வொரு அம்சமும் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் தனித்துவமான தேவைகளை மனதிற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் குழந்தைகளுக்கான இ.என்.டி நிபுணர் மற்றும் டாக்டர். நித்யா கூறுகையில், “குழந்தைகளுக்கு ஏற்படும் பல இஎன்.டி பிரச்சனைகள் பெரும்பாலும் தற்காலிகமானவை என்று அலட்சியப்படுத்தப்படுகின்றனர். ஆனால் உண்மையில் அவை குழந்தையின் செவித்திறன், பேச்சு, தூக்கம், கற்றல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பிரச்சனைகளை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ, அந்த அளவுக்கு நம்மால் சிறந்த சிகிச்சையை அளித்து நல்ல முடிவுகளைக் கொண்டுவர முடியும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்
வரலாற்று சின்னமான பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
கிருஷ்ணகிரியில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா: மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தர்மராஜ் நல திட்ட உதவிகளை வழங்கினார்
தேனி மாவட்டத்தில் கௌமாரியம்மன் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈத்தாமொழி அருகே நடந்து சென்ற பெண்ணின் நகை பறிக்க முயற்சி: போலீசார் தீவிர விசாரணை

May 11, 2026
39 Views
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் முன்பு தர்ணா பேராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account