தஞ்சாவூர், ஜூன் 15 –
தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 522 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ரேவதி உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவிய கலெக்டர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் சௌமியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



