சென்னை, ஜூலை 11 –
கல்வித் துறையில் வேகமாக வளர்ந்து வரும் உலகத்துக்கு ஏற்ப மாணவர்களைத் தயார் செய்வது குறித்து நவீன கல்வியை புகுத்தும் விதமாக கேம்பிரிட்ஜ் கல்வி முறையில் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில், உடல் ஆரோக்கியம், துன்பங்களைத் தாங்கும் திறன், நம்பிக்கை, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான பழக்கங்கள் ஆகிய அத்தியாவசிய அம்சங்கங்களை அறிமுகபடுத்தி மாணவர்களின் தரத்தில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஹோலி சாய் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வரும் கேம்பிரிட்ஜ் பள்ளிகளின் தமிழ்நாடு கூட்டமைப்பின் தலைவருமான டாக்டர் எஸ். பிரேம் சங்கர், முழுமையான மாணவனை உருவாக்குவதே கேம்பிரிட்ஜ் கல்விமுறையின் முக்கியமான நோக்கமாகும். கேம்பிரிட்ஜ் பாடத் திட்டத்தில் சமீபத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில், மாணவர்களின் ஆரோக்கியம், கற்றல் திறன் மட்டுமல்லாது எதிர்காலத்துக்குத் தேவைப்படும்அடிப்படைத் திறன்கள் ஆகியவற்றைச் கற்றுத் தருவதற்கான முக்கியத்துவம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்தோடு தான், தமிழகத்தில் இருக்கும் கேம்பிரிட்ஜ் சர்வதேச பள்ளியான ஹோலி சாய் பள்ளி செயல்படுகிறது. அங்கே விளையாட்டு உள்ளிட்ட கல்விக்கு அப்பாற்பட்ட திறன் வளர்ப்பை விட, மாணவர்களின் உடல்நலனே அடிப்படை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த உடற்பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மாணவர்கள் மத்தியில் நல்ல மாற்றங்கள் தெரியத் தொடங்கின.
மாணவர்கள் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதோடு, உற்சாகமாகவும் கட்டுப்பாட்டுடனும் நம்பிக்கையுடனும் இருக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பழக்கவழக்கங்கள் என்னென்ன என்பதை மாணவர்கள் தெரிந்துகொண்டதோடு, பெற்றோரும், தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பேணப்படுவதைக் கண்டு பாராட்டுகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இதன்மூலம், வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு வளர்க்கப்படுவதோடு, விமர்சன சிந்தனை, படைப்பாளுமை, கூட்டுமுயற்சி, நிகழ்கால பிரச்னைகளை தீர்க்கும் திறன் ஆகியவையும் வளர்க்கப்படுகின்றன. பாடங்களில் மட்டும் மாணவர்களின் திறன் வளர்க்கப்படுவதில்லை. அதோடு, நம்பிக்கை, பொறுப்புணர்வு, சிந்தனை, புதுமை படைத்தல் உள்ளிட்ட பண்புகளும் வளர்க்கப்படுகின்றன. உலகத்தை எதிர்கொள்ள மாணவர்களுக்கு இத்தகைய திறன்கள் உதவுகின்றன,” என்றார்.


