நாகர்கோவில், ஜூன் 8 –
நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் தனியார் வங்கி மேலாளராக உள்ளார். எங்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. திருமணம் முடிந்த சில நாளிலேயே மது அருந்திவிட்டு வந்து என்னை சித்திரவதை செய்ய தொடங்கினார். நான் குடும்ப நலன் கருதி பொறுமையாக இருந்தேன்.
இந்த நிலையில் சம்பவ தினம் என்னை அவதூறாக பேசி, தாக்கி விருப்பத்துக்கு மாறாக உடலுறவு வைப்பதற்கு கட்டாயப்படுத்தினார். நான் மறுத்ததால் செல்போன் சார்ஜ் வயரால் என்னை சரமாரியாக தாக்கினார். இதில் கைகள் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இனி அவருடன் வாழ்ந்தால் என்னை கொன்று விடுவார் என்ற அச்சத்தில் நான் வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


