கோவை, மே 29 –
தங்கம் மற்றும் வைர நகை வணிகத்தில் தரம், பாரம்பரியம் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் பெயர் பெற்ற ஜுவல் ஒன் நிறுவனம் தனது புதிய பிரம்மாண்டமான ஃபிளாக்ஷிப் ஷோரூம் திறப்பு விழா கோவை கிராஸ் கட் சாலையில் நடைபெற்றது.
42 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே ஶ்ரீனிவாசன் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடம், நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், 5 தளங்களைக் கொண்ட இந்த ஷோரூமில் தனித்தனி பிரத்யேக பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தங்க நகைகளுக்கான “கோல்ட் கேலரி”, வைர நகைகளுக்கான “டைமண்ட் அட்லீயர்”, மணப்பெண் நகைகளுக்கான “ஃப்ரைடால் பவிலியன்”, தனிப்பயன் நகை வடிவமைப்புகளுக்கான “தி ஒன் லான்ச்”, வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான “சில்வர் ஸ்டுடியோ” ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் 7 லட்சத்துக்கும் அதிகமான நகை வடிவமைப்புகள்,20-க்கும் மேற்பட்ட மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள், 100 சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்த 916 ஹால்மார்க் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளுக்கான முழுமையான எக்ஸ்சேஞ்ச் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அடையாளத்துடன் பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கும் இந்த திறப்பு விழாவில் கோவையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.



