திருச்சி, மே 26 –
மத்திய சுகாதார அமைச்சகம் எபோலா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி விமான நிலையம் வரும் நோய் அறிகுறிகளுடன் கூடிய நபர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் 24 மணி நேரமும் மருத்துவ சேவை தயார் நிலையில் இருக்கும் என மருத்துவமனை டீன் குமரவேல் தெரிவித்துள்ளார்.



