By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேயர் (பொ) ஆய்வில் சிக்கிய மாநகராட்சி பூங்காவின் செயலற்ற செயற்கை நீரூற்று: சுத்தம் செய்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மேயர் (பொ) ஆய்வில் சிக்கிய மாநகராட்சி பூங்காவின் செயலற்ற செயற்கை நீரூற்று: சுத்தம் செய்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மேயர் (பொ) ஆய்வில் சிக்கிய மாநகராட்சி பூங்காவின் செயலற்ற செயற்கை நீரூற்று: சுத்தம் செய்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

Last updated: May 18, 2026 6:47 pm
May 18, 2026
17 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 18 –

நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ளவர்களின் முக்கிய பொழுதுபோக்கு பூங்காவாக காணப்படுவது நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான வேப்பமூடு பகுதியில் உள்ள சர்.சி.பி ராமசாமி நினைவு பூங்கா ஆகும். இந்தப் பூங்காவில் உள்ள பல்வேறு உபகரணங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும், கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஏற்படுத்தப்பட்ட நீரூற்றுப் போன்றவைகள் செயல்படாமல் உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் மேயர் பார்வைக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. எனவே இன்று காலை நாகர்கோவில் மாநகராட்சி (பொ) மேயர் மேரி பிரின்சி லதா மாநகராட்சி பூங்காவிற்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பூங்காா அருகிலுள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மிக அருகில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கேளிக்கை ராட்டு பாதுகாப்பற்ற முறையில் போடப்பட்டிருப்பதை கண்ட அவர் உடனடியாக அதனை மாற்றி வேறு இடத்தில் நிறுவ உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பூங்காவின் மின் விளக்குகளையும், சிசிடிவி கேமராக்களையும் பழுது ஏற்படாமல் பாதுகாக்க வலியுறுத்தினார்.

தொடர்ந்து பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட அவர் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீர் ஊற்று சிகரம் செயல்படாமலும், சுகாதாரமற்ற முறையில் இருப்பதை கண்ட அவர் உடனடியாக பௌண்டைன் நீரினை மாற்றி, அதனை சுத்தம் செய்து மீண்டும் திறம்பட அந்த பௌண்டைனை செயல்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர் மாநகரப் பூங்காவிற்கு உட்பட்ட உரம் தயாரிக்கும் கிடங்கினை ஆய்வு செய்தார்.

அப்போது தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட காலை உணவை உண்டு பார்த்து காலை உணவு தயாரிப்பவரிடம் இன்னும் தரமான உணவு வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள டிஜிட்டல் கோலரங்கத்தை பார்வையிட்ட அவர் அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தது மட்டுமல்லாமல் உள்ளே அமர்ந்து கோலரங்கத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளை பார்வையிட்டார். மேலும் பூங்காவை சுத்தமானதாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.

நடைபெற்ற ஆய்வின்போது மாநகர பொறியாளர் ரகுராம், சுகாதார அலுவலர் ஸ்டான்லி குமார், சுகாதார மேற்பார்வையாளர் விக்னேஷ், நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வழக்கறிஞர். ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள் மேரி ஜெனட் விஜிலா, விஜிலா ஜஸ்டஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும் – குமரி மாவட்ட நிர்வாகம்
கன்னியாகுமரி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
கர்ப்ப காலத்தில் கல்லீரல் ஆரோக்கியம்: ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் தெரிந்து கொள்ள வேண்டியவை
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைப்பு; குமரி வரும் ரயில்களுக்கு வேகம் அதிகரிக்கும்
ஆசிய விளையாட்டு போட்டியில் அருமனை மாணவி சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

துர்நாற்றம் வீசும் ஏரி தூர்வாரும் பணியை பர்வையிட்ட அமைச்சர்

December 17, 2024
49 Views
10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா
பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account