By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு

Last updated: May 18, 2026 6:40 pm
May 18, 2026
58 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 18 –

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025-2026ம் கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்று, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: 2025-2026ஆம் கல்வியாண்டில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த 10,179 மாணவர்களும், 11,360 மாணவிகளும் என மொத்தம் 21,539 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 9,780 மாணவர்களும், 11,248 மாணவியர்களும் என மொத்தம் 21,028 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அளவில் 97.63 சதவீதம் பெற்று 3வது இடம் பெற்றுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளில் 2950 மாணவர்களும், 3262 மாணவிகளும் என மொத்தம் 6212 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளார்கள். அதில் 2758 மாணவர்களும், 3213 மாணவிகளும் என மொத்தம் 5971 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று 96.12 சதவீதம் பெற்று தமிழ்நாடு அரசுப்பள்ளிகள் அளவில் நமது மாவட்டம் 5 வது இடம் பெற்றுள்ளது மிகவும் பெருமைக்குரியது.

அதனடிப்படையில் இன்று அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற கோட்டாறு அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவி அக்ஷயா 590, கொட்டாரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவி அக்ஷயா 589 மதிப்பெண்களும், கன்னியாகுமரி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியை சார்ந்த மாணவன் ராகவா ஹரி 586 மதிப்பெண்களும், கன்னியாகுமரி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியை சார்ந்த மாணவி பாகிஷியா 581 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் நாகர்கோவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவன் ஜெய்ரேஷ் பிராங்க் 581 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். இதற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கல்வி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ஜெயராஜ், நாகர்கோவில் கல்வி அலுவலர் ஜெயராஜ், தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் அஜிதா, துணை காவல் கண்காணிப்பாளர் பிச்சையா, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

1.53 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வீடு கிரிக்கெட் ரப்பர் பந்து அடித்ததில் சேதம்: சீரமைக்க அதிமுகவினர் கோரிக்கை
கன்னியாகுமரி அருகே கொத்தனாருக்கு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
மூட்டா மற்றும் ஏ யூ டி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

October 29, 2025
56 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள்
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி
அந்நூர் இஸ்லாமிய கல்லூரியில் பட்டமளிப்பு விழா
முசிறி: அதிமுக பிரமுகர் உறவினருக்கு ஆறுதல் கூறிய சிவபதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account