திண்டுக்கல், மே 18 –
திண்டுக்கல் மாவட்டம் விஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் வள்ளி நாயகி அறக்கட்டளை இணைந்து நடத்திய கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமின் நிறைவு விழா, திண்டுக்கல் NGO காலனியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பயிற்சியை முடித்த வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக தேசிய அளவிலான தடகள ஓட்டப் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களுடன் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் மனிதநேயம் V. ஞான குரு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், வள்ளிநாயகி அறக்கட்டளையின் தலைவர் PR ஆனந்த் கலந்து கொண்டு வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். மேலும் விழாவில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை உதவும் கரங்கள் பொறுப்பாளர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் தமிழரசி, தடகளப் பயிற்சியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் இந்நிகழ்சியில் கலந்து கொண்டனர். இளம் வீர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த முகாம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாள ர் சௌந்தர்ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.



