கிருஷ்ணகிரி, மே 16 –
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன் மற்றும் வளர்மதி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை விவசாயம் மூலம் விவசாயம் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை மூலம் தயாரிக்கப்பட்ட படுஞ்சகாவியம் மூலம் கருப்புகவுனி சாகுபடி செய்துள்ளார்.
விவசாயி வளர்மதி சாகுபடி செய்துள்ள விவசாய நிலத்தினை ஒய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்கினர் மனோகரன் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிடம் கருப்பு கவுனி சாகுபடி குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பேசிய விவசாயி வளர்மதி: முன்னோர்கள் சாகுபடி செய்யப்பட்ட கருப்பு கவுனி போன்ற பல்வேறு ரகங்கள் மக்கள் மத்தியில் இருந்து மறைந்து போனது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் மக்கள் மத்தியில் கருப்பு கவுனி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக ஒய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் மனோகரன் ஆலோசனைப்படி இயற்கை விவசாயம் மூலம் கருப்பு கவுனி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நோய் தாக்குதல் இன்றி கருப்பு கவுனி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் அறுவடை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் மக்கள் மத்தியில் இருந்து மறைந்து போன கருப்பு கவுனி போன்ற பயிர்களை மீட்டெடுக்க விவசாயிகள் அதிக அளவில்
முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



