நாகர்கோவில், மே 11 –
மணவாளக்குறிச்சி அருகே காருபாறை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் மகன் ஜோதி குமார் (39). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி குமாரை அவரது மனைவி விட்டு பிரிந்து சென்று விட்டாராம். இதனால் மனவேதனையில் இருந்த ஜோதி குமார் சம்பவத்தன்று வீட்டில் வைத்து தென்னைக்கு பயன்படுத்தும் மாத்திரையை தின்றுள்ளார்.
உடனடியாக குடும்பத்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதிகுமார் இன்று உயிரிழந்தார். இது குறித்து கலைச்செல்வி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


