தஞ்சாவூர், மே 2 –
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் திருச்சி எஸ்.எம்.பள்ளி முதலிடம் பெற்றது.
இப்போட்டியை மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களை செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருது பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இப்போட்டியில் திருச்சி எஸ் எம் பள்ளி அணி முதலிடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் விண்ணமங்கலம் அணி இரண்டாம் இடத்தையும், வைத்தியநாதன் பேட்டை அணி மூன்றாவது இடத்தையும், வடுவூர் அணி நான்காவது இடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மருது பாண்டியர் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மருது பாண்டியர் முதல் பரிசாக ரூபாய் 20,000, இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000, மூன்றாவது பரிசாக ரூபாய் 10,000, நான்காவது பரிசாக ரூபாய் 5,000 வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் விஜயா, துணை முதல்வர் தங்கராஜ், ஒருங்கிணைப்பாளர் மதுகிருத்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



