மார்த்தாண்டம், ஏப். 27 –
சிதறால் மங்கலத்து விளை நாகராஜா சுவாமி கோயில் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் மற்றும் 37 வது ஆண்டு திருவிழா கடந்த 24 தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் கணபதி ஹோமம், கலசபூஜை உட்பட பல சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
விழாவில் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம் அம்பலகடை கேளேஸ்வரம் சிவன் கோயிலில் இருந்து துவங்கி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் தாலபொலி அணிவகுப்பு, நையாண்டி மேளம், நாதஸ்வரம் அலங்கார வாகனங்கள் புடை சூழ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நாகராஜா சுவாமி எழுந்தருளி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இந்த ஊர்வலத்தை இந்து கோயில்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் முருகன் துவங்கி வைத்தார். விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வெள்ளாங்கோடு, கல்லு நாட்டி, புளிச்சாம்விளை வழியாக நாகராஜா கோயில் சன்னதி வந்தடைந்ததை தொடர்ந்து நாகராஜா சுவாமிக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வழி நெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.



