நாகர்கோவில், ஏப். 14 –
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இருந்து அவர் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து கோவில் வாசலில் சாமி தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்களிடம் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்னர் எம் ஆர் காந்தி பிரச்சாரத்தில் பேசியதாவது:- நாகர்கோவில் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள். நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு தடையின்றி சுத்தமான குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்.
பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் டவுன் ரயில்வே வரை பயணிகள் எளிதாக செல்லும் வகையில் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். நாகர்கோவிலில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு பெருக்கும் வகையில் எனது முயற்சியால் கொண்டுவரப்பட்ட ஐடி பார்க் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவேன். அதுமட்டுமின்றி கோணம் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பேன். இதனால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு வசதி பெறுவார்கள்.
நாகர்கோவில் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்ற எனக்கு ஆதரவு தாருங்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக தலைமையிலான ஆட்சி அமையும். அப்போது உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற முழுமையாக உழைப்பேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது நாகர்கோவில் மாநகராட்சி மாநகர உறுப்பினர் ஸ்ரீலிஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.



