துறையூர் அருகே மணியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் குமார், நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) நள்ளிரவு 2 மணியளவில் போலீசாரால் பிசிஆர் வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து அதிமுக தொண்டர்களும் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென குமாரின் மனைவியும் மகனும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



