நாகர்கோவில், ஏப். 1 –
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ.எம்.பாரதி தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார், ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் இன்று கல்குளம் வட்டம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக காட்டாத்துறை என்ற இடத்தில் வைத்து கண்டெய்னர் லாரி ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அதில் சுமார் 6000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட அரிசியை கோணம் அரசு நுகர்வோர் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து லாரி ஓட்டுனர் பாளையங்கோட்டையை சேர்ந்த தினேஷ் (25) என்பவரை பிடித்து குடிமைப் பொருள் குற்றவியல் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.



