By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறை மலைவாழ் பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறை மலைவாழ் பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பேச்சிப்பாறை மலைவாழ் பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு

Last updated: March 23, 2026 3:00 pm
March 23, 2026
38 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 23 –

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி அன்று நடைபெறுவதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைகள் வாயிலாக பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேச்சிப்பாறை பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தாங்கள் அளிக்கும் ஒரு வாக்கின் வலிமை குறித்து மலைவாழ் மக்களிடையே கலந்துரையாடப்பட்டுது. எவ்வித பணம், பரிசு பொருட்கள், ஆசை வார்த்தைகளுக்கும் அடிபணியாமல், மன உறுதியுடனும், நம்பிக்கையுடனும், நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

குறிப்பாக பேச்சிப்பாறை மலைவாழ் மக்களின் பங்களிப்பு 100 சதவீதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே இப்பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விடுபடாமல் வாக்களிக்கத் தேவையான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழாவில் தங்கள் பங்களிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் சந்தித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வுகளில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, வருவாய்த்துறை அலுவலர்கள், மலைவாழ் மக்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் டாஸ்மாக் ஊழியர் மீது பீர் பாட்டில் வீச்சு; மூன்று பேர் மீது வழக்கு
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
வெற்றி பெற்ற பெண் தலைமை காவலருக்கு எஸ் பி பாராட்டு
திருச்சி வாகன விபத்து – காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 மாதங்களில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: கலெக்டர் ரேவதி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 1 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையில் முறைகேடு

March 4, 2025
67 Views
பள்ளியில் பல பெண்களுக்கு பாலியல் சீண்டல்
விளாத்திகுளம் அருகே லேசான மழைக்கே குளம் போல் தேங்கியுள்ள பள்ளி வளாகம்
ASR மஹாலில்பன்னிரு திருமுறை மாநாடு
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தீவிர பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account