By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு: முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு: முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தொடங்கி வைத்தார்
தமிழ்நாடுதென்காசி

தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு: முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தொடங்கி வைத்தார்

Last updated: March 11, 2026 3:04 pm
March 11, 2026
63 Views
Share
SHARE

தென்காசி, மார். 11 –

தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேலு தொடங்கி வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவிற்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பி.ராஜவேலு தலைமை தாங்கி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ் குமார், முதன்மை சார்பு நீதிபதி பிஸ்மிதா, கூடுதல் சார்பு நீதிபதி முருகவேல், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி முத்துலட்சுமி, சிவகிரி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியுமான ஜெனிபர் ஜோசப், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி காளீஸ்வரி, சங்கரன்கோவில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா, ஆலங்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பி.ராஜவேலு நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைமையில் தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வந்தது. தற்போது தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதனை அடுத்து தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் குழு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இனி தென்காசி மாவட்ட பொதுமக்கள் திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நாட வேண்டியதில்லை. அவர்கள் தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நாடினால் போதுமானது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தனியாக செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கூடுதல் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மேலாளராக செயல்படுவார். சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் மனுக்கள் வழங்கலாம். ஓவ்வொரு மாதமும் மாவட்ட சட்டப்பணிகள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டங்களில்ல் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பளார் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். 

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய 4 புறநகர்களிலும் வட்ட அளவில் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்படும், தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்; மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்பே மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனுக்களை வழங்கி பரிகாரம் காணலாம். முக்கிய பிரச்சினைகள் குறித்து நீதிமன்றம் மூலம் பரிகாரம் பெறப்படும். இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து இங்கு மனு அளித்து பரிகாரம் பெறலாம்.

மேலும் சட்டம் சாராத பட்டா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இங்கு மனுக்கள் அளிக்கலாம். அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தென்காசி மாவட்ட பொதுமக்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு அருகே காவேரி ஆற்றில் மூழ்கி 3 பேர் சாவு: மீன் வலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
நாகர்கோவிலில் கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்: போலீஸ் வழக்கு பதிவு
நாகர்கோவில் மாநகராட்சி சாலைக்கு விடியல் வருமா? பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் சாலை: பல மாதங்களாக சீரமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

வேலைக்கு ஆட்கள் தேவை

July 4, 2024
298 Views
ஒரே கல்லில் 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயர்
தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை
இந்திய ஜனநாயக கட்சியின் 16 – ஆம் ஆண்டு துவக்க விழா
ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account