நாகர்கோவில், பிப். 2 –
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வி.நாராயணன் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இன்று குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சாமியின் தலைமை பதிக்கு நாராயணன் வருகை தந்தார். பின்னர் பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை அணிந்து அய்யாவை தரிசனம் செய்தார்.
பின்னர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். பின்பு முத்திரி கிணத்தில் பதம் விட்டு தொடர்ந்து தலைமை பதியில் சென்று பயபக்தியுடன் வழிபாடு செய்தார். இஸ்ரோ தலைவர் நாராயணனை தலைமை பதி நிர்வாகிகள் பால ஜனாதிபதி பையன் காமராஜ் பால் பையன், பையன் அன்பு வனம் நிர்வாகி பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தை சுற்றி வந்து மனமுருகி பிரார்த்தனை செய்து காரில் புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



