மார்த்தாண்டம், ஜன. 14 –
கொல்லங்கோடு அருகே சுண்டவிளையை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் மகன் அஸ்வின் (20). அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று மாலை தன்னுடன் படிக்கும் ஜோயல் என்ற மாணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
கொல்லங்கோடு அருகே மங்குழி பகுதியில் செல்லும் போது டயர் ஏற்றிக் கொண்டு எதிரே வந்த கூண்டு வாகனத்தில் பைக் எதிர்பாராதவிதமாக மோதி உள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அஸ்வின் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மாணவர் அஸ்வின் உயிரிழந்தார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



