ஈரோடு, ஜன. 12 –
கரும்பு வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர்கள் யுவராஜ், மூர்த்தி, ராமசாமி, மணி, செந்தில் மற்றும் கரும்பு வாகன உரிமையாளர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: 6 சக்கரம் கொண்ட லாரிகளில் 12 டன் கரும்பு ஏற்ற வேண்டும் என்று போக்குவரத்து துறையின் விதி உள்ளது. ஆனால் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகிகள் சுமார் 20 டன் வரை பாரம் ஏற்றச் சொல்லி நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அதிக அளவில் பாரம் ஏற்றுவதினால் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதுடன் செலவுகளும் அதிகரிக்கிறது.
மேலும் விவசாய நிலங்களில் மின் ஊழியர்கள் மிகவும் தாழ்வான நிலையில் இருப்பதால் அதிகாரமாக பாரம் ஏற்றி செல்லும் போது கரும்புகள் மின் கம்பிகள் மீது உரசி பின் இணைப்பு துண்டிப்பதுடன் தீ விபத்து ஏற்படும் சூழலும் ஏற்படுகிறது. மேலும் வாகன வாடகையும் மிகவும் குறைவாகவே வழங்கப்படுகிறது. இந்த வாடகையை உயர்த்தி கொடுத்தால் வருகிற பிப்ரவரி லாரி மற்றும் டிராக்டர்கள் 1 ந் தேதி முதல் அதிக பாரம் இல்லாமல் வாகனங்களை இயக்க தயாராக உள்ளோம். மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய டிராக்டர்களை சட்ட விரோதமாக கரும்பு பாரம் ஏற்றி செல்வதையும் தடை செய்ய வேண்டும்.
கரும்பு ஏற்றி செல்லும் லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று லாரி மற்றும் டிராக்டர்களுக்கு சரியான வாடகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



