அலங்காநல்லூர், ஜூன்.09
மதுரை மாவட்டம் பாலமேடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவானது கடந்த மே மாதம் 31ஆம் தேதி செல்லாயி அம்மனுக்கு சாமி சாட்டுதல் செய்து காப்பு கட்டுதளுடன் தொடங்கி மூன்று நாட்கள் நடந்த இந்த உற்சவ விழாவில் மங்கல இசை முழங்க வலம்புரி விநாயகர் கோவிலில் உலக மக்கள் உண்மைக்காக வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் மண் பானை தலையில் சுமந்து ஊர்வலமாக அம்மன் ஆலயத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் சிறப்பு வானவேடிக்கை முழங்க திருக்கண் திறந்து அலங்கார அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரண்டாம் நாள் திருவிழாவில் மஞ்சக்கருப்பு சுவாமிக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலாகுத்தும் நிகழ்ச்சியும் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மூன்றாம் நாள் திருவிழாவாக வானவேடிக்கை முழங்க சிறப்பு அலங்காரத்துடன் பொதுமக்கள் அனைவரும் பழத்தட்டு ஊர்வலமாக எடுத்து வந்து செல்லாயி அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று.
இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு தெரு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சிறப்பாக செய்திருந்தனர்.