By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை

Last updated: December 31, 2025 6:20 pm
December 31, 2025
75 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 31 –

“காவலனாக இரு உறுதியாக செயலாற்று” என்ற சொல்லுக்கு இணங்க பொதுமக்களின் நண்பர்களாகவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கிவரும் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஒரு வருட பணியின் சிறப்புகள்.

“தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை :-

குமரி மாவட்டத்தில் அனைத்து தரப்பினராலும் மதிப்புடனும், மரியாதையுடனும் போற்றப்படு வருபவர் எஸ் பி ஸ்டாலின். இவரின் அதிரடி நடவடிக்கையால் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்து மக்கள் நிம்மதியுடன் இருந்து வருகின்றனர். பொதுமக்கள் நலனில் மட்டுமல்லாமல் காவலர்களின் நலனிலும் அதிக அக்கறை எடுத்து பணியாற்றி வருகிறார்.
காவல் பணியில் ஓய்வின்றி 24/7 என பம்பரம் போல் சுழன்று வருவதால் எல்லா இடங்களிலும் எந்த நேரமும் இவரை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை மாவட்டம் மக்களிடம் பெற்ற காவல் அதிகாரி ஆவார்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ் பி ஸ்டாலின் தன்னுடைய பணியை சிறப்பாக இன்று வரை செய்து வருகிறார். இவரின் அதிரடி நடவடிக்கை மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குமரி மாவட்டம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் காவல்துறையை வியந்து பார்க்க செய்துள்ளது. சிறந்த காவல் அதிகாரியான இவர் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து, நேர்மை, தைரியம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறார்.

குற்றங்களை விரைந்து விசாரித்து, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஊழலற்ற நிர்வாகத்தையும், அரசியல் தலையீடு மற்றும் லஞ்சத்திற்கு இடம் தராமல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனச் செயல்பட்டு சவாலான சூழ்நிலைகள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டு அஞ்சாமல் கடமையாற்றி பொது ஒழுங்கைப் பராமரித்து, குற்ற நிகழ்வுகளைத் தடுத்து சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாகவும், பொதுமக்களுடன் இணக்கமாகச் செயல்பட்டு, பாதுகாப்பான சூழலை உருவாக்கி, பலவீனமானவர்களுக்கு ஆதரவாகவும், குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருகிறார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, சமூகத்தில் நீதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்தும்,
ரோந்துப் பணிகள், உளவுத் தகவல்களைச் சேகரித்தல், குற்றவாளிகளைக் கண்டறிந்து, தடயவியல் அறிவியலைப் பயன்படுத்தி விரைவாக நடவடிக்கை எடுத்தல், சாதி, மத, இன வேறுபாடுகளின்றி, பாரபட்சமற்ற முறையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட உதவிகளை வழங்கி, சமூக நீதிக்காகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் அயராது உழைத்து, அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு நல்ல பாலமாக இருந்து, இயற்கைப் பேரிடர்கள் மற்றும் அவசர காலங்களில் மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளில் முன்னின்று செயல்படுத்தி,
பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் உயிருக்கும் உடைமைக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு அளித்து, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தி, அச்சமற்ற சமூகத்தை உருவாக்கி குற்றத் தடுப்பு, விரைவான புலனாய்வு, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் மற்றும் தகுந்த சட்ட நடவடிக்கை, நேர்மையான செயல்பாடு மற்றும் மக்கள் நட்பு காவல் மூலம் சமூக ஒற்றுமையை மேம்படுத்தி வரும் இவர் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தீவிரமாக கவனம் செலுத்தியதின் விளைவாக “காவல் உதவி “என்ற ஒரு செயலியை உருவாக்கி பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் முனைப்போடு செயலாற்றி போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு “நிமிர்” (The Rising Team) என்ற போக்சோ சட்ட விழிப்புணர்வு இயக்கம் உருவாக்கி தற்போது நிமிர் குழுவினரின் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் கண்காணிப்பு கேமரா அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி பொதுமக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறுவி வருகிறது. மேலும் ஒரு கிராமம் இரண்டு சிசிடிவி கேமரா ஒரு காவலர் என்கின்ற திட்டத்தை கிராமம் தோறும் ஏற்படுத்தி கிராமப்புற பாதுகாப்பை உறுதிப்படுத்தியும், காவலர் பொதுமக்கள் நல்லுறவையும் ஏற்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.

பல குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமரா இப்போது கட்டாயம் மற்றும் அவசியம் என்றாகிவிட்டது. இதெல்லாம் காவல்துறையின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதனால் காவல்துறை குற்ற நிகழ்வுகளை வைத்து கண்காணிப்பு கேமரா மூலம் எளிதில் குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது. பைக் திருடர்கள் செயின் பறிப்பு குற்றவாளிகள் எல்லாம் பெரும்பாலும் கண்காணிப்பு கேமரா உதவியால்தான் கைது செய்யப்படுகிறார்கள்.

மேலும் எஸ் பி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு வெற்றிகரமாக இன்றளவும் செயல்பட்டு வரும் மேலும் சில திட்டங்கள்:

பொதுமக்களின் புகார் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணையின் திருப்தி மற்றும் பொதுமக்களின் பொதுவான தகவல்களை பகிர்ந்து கொள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் Public Feedback Centre, கடைநிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தினமும் 18 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியான மனம் திறந்து நிகழ்ச்சி,
இளைஞர்கள் போதை போன்ற தவறான பாதைகளுக்கு செல்லாமல் சரியான பாதையை வழிகாட்டும் ஒருபகுதியாக, உதவி ஆய்வாளர் தேர்வுக்கான வெற்றிப்பாதை இலவச பயிற்சி,குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இல்லவாசிகள் சிகிச்சை வார்டை(CELL WARD) திறப்பு, குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுக்கும் வகையில் VHF, சிசிடிவிகள் பொருத்தப்பட்ட 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் சுற்றுலா ரோந்து சேவை, மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு உட்கார்ந்து பணி செய்ய உட்காரும் வகையிலான பேரிகேட் வசதி, காவலர்கள் தங்கி ஓய்வு எடுக்கும் வகையில் அறைகளில் SSI வில்சன் நினைவு காவலர் நல தங்கும் விடுதி, ZERO ACCIDENT KUMARI என்ற இலக்கினை நோக்கி செயல்படும் Road Safety Club அனைத்து பள்ளிகள் அடங்கிய மாணவர் மாணவியர் அமைப்பு, காவலர்களுக்கு வழங்கப்படும் வார ஓய்வினை உறுதிப்படுத்த காவலர்களும் செல்போன் மூலமாகவே தங்களுக்கு தேவையான நாட்களில் வார ஒய்வினை கேட்டு விண்ணப்பம் அளிக்க REST (Web Portal for Week Off) செயலி, Quick Response Team (QRT) 360° CCTV கேமரா பொருத்திய வாகனங்கள் மாவட்ட முழுவதும் கண்காணிப்பு பணிக்காக ஏற்படுத்தியது, ஆட்டோ மற்றும் பொதுத்துறை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை மற்றும் அனைத்து துறை எண்கள், கம்ப்ளைன்ட் போர்டல் அடங்கிய QR குறியீடு எண் கொண்டு வந்தது, பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கான வெற்றிப்பாதை படிப்பகம் மற்றும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையம்,
மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் உணவு அருந்தும் அறை மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமரும் அறை, தினமும் காலை 12 மணி முதல் 2 மணி வரை எஸ் பி ஸ்டாலின் நேரடியாக பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று தீர்வு காண்பது போன்ற சிறப்பு அம்சங்களை கொண்ட முத்தான திட்டங்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் நடைமுறைப்படுத்தி இன்றளவும் செயல்படுத்தி வருவது இவரின் தனி சிறப்பாகும்.

மேலும் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்களின் நடமாட்டத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துக்கள், வாகன நெருக்கடிகள் போன்றவற்றை சிறப்பாக கையாண்ட விதம், போக்ஸ்சோ குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தது, ரீல்ஸ் மோகத்தால் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த இளைஞர்களை நல்வழிப்படுத்தி வருவது போன்ற பணிகளை திறன் பட செய்து குற்றமில்லா குமரியை உருவாக்கி வருவதோடு ஊழலற்ற, நேர்மையான நடத்தையைத் தன் வாழ்க்கையிலும், பணியிலும் கடைப்பிடித்து, பொதுமக்களின் நம்பிக்கையை பெற்ற எஸ் பி ஸ்டாலின் பணி இந்த ஆண்டிலும் இன்னும் சிறப்பாக அமையும் என்பதால் “மக்களின் காவலன் “எனும் பட்டப் பெயரை அவருக்கு வழங்கி மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பினர் வாழ்த்து
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
நித்திரவிளை கூலி தொழிலாளியை மிரட்டிய அண்ணன் தம்பி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

முன்னேற்றத்துக்கு அதிக அளவு சட்டமன்றம்

November 28, 2024
34 Views
திருக்கோவில் கோபுரம் விமானங்களுக்கு ஒளியூட்டும் விளக்குகள்
கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account