களியக்காவிளை, டிச. 26 –
களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சார்ந்தவர் லாரன்ஸ் மகன் எபன் ஜெறி (28) இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு புதுக்கடை அருகே அம்சி பகுதியை சார்ந்த சாகினியா (25) என்ற வழக்கறிஞர் பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது சாகினியா இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எபன் ஜெறி கடந்த 24-ம் தேதி இரவு தனது நண்பர்களுடன் குழித்துறையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நடந்த கிறிஸ்மஸ் பார்ட்டியில் கலந்து கொண்டார். மது போதையில் இருந்த எபன் ஜெறி திடீரென தாமிரபரணி ஆற்றில் குதித்தார். இத்தகவல் அறிந்த தியனைப்பு துறையினர் படகில் பாதுகாப்பு உபகரணங்களுடன் தேடினர்.
இரண்டு நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் தாமிரபரணி ஆற்றில் கமுகன்னூர் சிவன் கோயில் கடவு அருகே சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலத்தை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு செல்லப்பட்டது. இன்று பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



