களியக்காவிளை, டிச. 16 –
மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம் குழித்துறை உள்ள ரிசார்ட்டில் துவங்கியது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி நிர்வாக இயக்குனர் ஜெயந்தி தொழில் முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாமில் தலைமை வகித்தார். ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா குழித்துறை கிளை சீப் மேனேஜர் லின் இராமச்சந்திரன் திருவிளக்கு ஏற்றி வைத்தார். கேடர் இந்தியா நிர்வாக இயக்குனர் மோகன் குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பயிற்சியின் சிறப்பு விருந்தினர்களாக மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பாக நாகர்கோவில் அலுவலகத்தில் இருந்து துணை இயக்குனர் வீணா, பயிற்சியின் சிறப்புகள் குறித்து பேசினர். பேராசிரியர் எபி தோமஸ், பயிற்சி அளித்தார்.
தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாமில் பொருளாதார மேம்பாடு, வரவு செலவு கணக்குகள், எஸ்.எம்.எம். ஈ யின் செயல்பாடுகள், ஏற்றுமதி செய்தல், புதிய பொருட்கள வடிவமைத்தல், டிஜிட்டல், மார்க்கெட்டிங், சிறந்த தொழில் முனைவோர் அனுபவம் பகிர்தல், உள்ளிட்ட பயிற்சிகள் நடக்கிறது. பயிற்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி இயக்குனர் ஜெபசாலினி, ஜெப சாலினி நன்றி கூறினார்.



