By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

Last updated: December 16, 2025 6:32 pm
December 16, 2025
48 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 16 –

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ வுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் 2005 இல் நிறைவேற்றப்பட்டு கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது.

இது ஒரு வறுமை ஒழிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் பெரும்பாலும் பயனடைந்தவர்கள் கிராமப்புற பெண்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஆவார்கள். இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதரம் மேம்பட்டதோடு மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது மத்திய பாஜக மோடி அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலமாக 10 சதவிகிதத்தினர் மட்டும் தான் 100 நாள் வேலை வாய்ப்பை இதுவரை பெற்றுள்ளனர். மீதியுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதால் கிராமப்புற தொழிலாளர்கள் வேலை தேடி புலம் பெயர்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த நோக்கத்திற்காக 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்பட்டதோ, அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு படுகொலை செய்து வருகிறது.

தேசத்தந்தை காந்தியடிகளின் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால் ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்வதோடு கிராமப்புற ஏழை மக்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
மார்த்தாண்டம் அருகே பைக் – கார் மோதல்: வாலிபர் படுகாயம்
வழக்கறிஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியன் நினைவேந்தல் நிகழ்வு
லீபுரம் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’

May 27, 2025
57 Views
சந்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு
குழந்தை தெரசா ஆலயத்திற்கு புதிய தேர். மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா வழங்கினார்
குமரனுக்கு புகழஞ்சலி ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா: மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தர்மராஜ் நல திட்ட உதவிகளை வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account