சென்னை, டிச. 11 –
சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே சென்னையின் முதல் முழுமையான கேம்பிரிட்ஜ் உறைவிடப் பள்ளி வளாகமாக தொடங்கப்பட்டிருக்கிறது. நீலகேசவ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் டிரஸ்ட் மூலம் நிறுவப்பட்டிருக்கும் இப்பள்ளி, குறிக்கோளுடன் கூடிய கற்றல் மற்றும் கட்டமைக்கப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னுரிமையுடன் கல்வி வாய்ப்பை வழங்குகிறது.
இப்பள்ளியின் தொடக்கம் குறித்து சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே பள்ளியின் இயக்குனர் சந்தீப் வாசு கூறியதாவது: தன்னம்பிக்கை நிறைந்த மற்றும் சுதந்திரமான கற்றலைப் பெறும் நபர்களாக மாணவர்களை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் இதன் இடவசதி, பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தெளிவான கற்றல் நோக்கத்தை மையமாகக் கொண்டு, மாணவர்களின் கூர்நோக்கம் மற்றும் ஆராய்ந்து அறிவதற்கான தேடலை ஆதரிக்கும் வகையிலான நவீன வகுப்பறைகள் மற்றும் இடவசதிகளை இக்கல்வி வளாகம் கொண்டுள்ளது.
இப்பள்ளியில் பின்பற்றப்படவிருக்கும் கல்வி அணுகுமுறையானது, கருத்துத் தெளிவு, தகவல் தொடர்பு மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய திறன் வளர்ச்சியை வலுப்படுத்த, கேம்பிரிட்ஜ் ( IGCSE) கல்வி முறையை ‘இன்டர்நேஷனல் கிரியேட்டிவ் பாத்வே’ திட்டத்துடன் ஒருங்கிணைக்கிறது. இங்குள்ள உறைவிட விடுதிகள் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை கனிவான அக்கறையுடன் பின்பற்றி மாணவர்களின் நலனை பேணுவதோடு, அவர்களின் உடல்தகுதியை உறுதிசெய்ய சமச்சீரான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வழங்குகின்றன.
நவீன கால குழந்தைப் பருவத்திற்கும் மற்றும் தற்காலத்தில் பெற்றோர்களது குழந்தை வளர்ப்பின் எதார்த்த சூழலுக்கு ஏற்றவாறும் கல்வியை வழங்கும் நோக்கத்தோடு கட்டமைப்பை சேஜ்ஹில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
அமைதியான சிந்தனை, நிலையான வளர்ச்சி மற்றும் தலைமைத்துவ பண்பைப் பெற்று பிறருக்கு வழிகாட்டும் திறனை ஊக்குவிக்கும் சூழலை மாணவர்களிடம் உருவாக்குவதே எமது முக்கிய குறிக்கோளாகும்.”
தொடர்புக்கான ஒவ்வொரு செயல்பாடும், அணுகுமுறையும் சிறந்த நோக்கமுள்ளதாகவும், மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் விதமாக பள்ளிக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கு இடையே ஒரு தொடர்ச்சியான இணைப்பு நிலையை உருவாக்குவதன் மூலம் மாணவர்களின் வளர்ச்சி நிலையாக இருப்பதை இந்த கட்டமைப்பு உறுதி செய்கிறது.
சென்னையின் புறநகர் பகுதியில், நவீன கற்றல் வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் அழகான திறந்தவெளி அமைவிடங்கள், இயற்கை அழகுள்ள சூழல் ஆகிய சிறப்பம்சங்களுடன் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட ஒரே விசாலமான வளாகத்தில் சேஜ்ஹில் செயல்பட தொடங்கப்பட்டுள்ளது என்றார்.



