களியக்காவிளை, டிச. 9 –
குழித்துறை கல்லுகட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் நாயர் (64). இவர் தனது குடும்பத்துடன் ஓசூரில் உள்ளார். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அக்கம் பக்கத்தினர் நாகேந்திரன் நாயருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் ஊருக்கு வந்து வீட்டில் பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் நகை பணம் எதுவும் இல்லாததால் திருட்டு போகவில்லை. இது தொடர்பாக களியக்காவிளை காவல் நிலையத்தில் நாகேந்திரன் நாயர் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் அருகே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம
காசர்கோடு பகுதி சேர்ந்த பாபு என்ற கல்யாணராமன் (57) என்பது தெரிய வந்தது. நேற்று தனிப்படை போலீசார் காசர்கோடு சென்று பாபுவை கைது செய்து அழைத்து வந்தனர். பாபு மீது தக்கலை காவல் நிலையத்தில் திட்டு, கொள்ளை வழக்கில் உள்ளது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


