பரமக்குடி, டிச.8 –
எஸ் ஐ ஆர் பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் துவக்கப்பட்ட எஸ் ஐ ஆர் திருத்தப் பணிகள் பரமக்குடி நகராட்சியில் பூத் எண் 28 முதல் 106 வரையிலான 79 பாகங்களில் வாக்காளர்களை சந்தித்து திருத்தப் படிவங்களை வழங்கும் பணியும். நிரப்பிய படிவங்களை திரும்ப பெறும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதில் இறந்தவர்கள், மாறுதலாகி சென்றவர்கள், இரண்டு இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்து முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக நகர் செயலாளர் வின்சென்ட் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில், விசாரணை செய்து முறையீடு நடக்கவில்லை என தெரிவித்தனர்.இதனைக் கண்டித்து பரமக்குடி நகராட்சி ஆணையரிடம் அதிமுக நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் சதன் பிரபாகர் முத்தையா மாவட்ட விவசாய அணி செயலாளர் வடமலையான் ஆகியோர் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது நகராட்சி சார்பாக பி எல் ஓ நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று போது. திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், மாறுதலாகி சென்ற மற்றும் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்களின் படிவங்கள் ஒவ்வொரு பூத்திலும் சுமார் 100 முதல் 300 வரையிலான படிவங்கள் பி எல் ஓ க்களிடம் மீதம் இருந்தன.
இந்த நிலையில், செப்.4 குள் 100% படிவங்களை திரும்பப் பெற்று ஆன்லைனில் ஏற்ற வேண்டும் என்பதால், 79 பூக்களில் பணியாற்றிய பி எல் ஓக்களிடம் மீதம் இருந்த மனுக்களை எல்லாம் பெற்றுக் கொண்டு நகராட்சி அலுவலகத்தில் அந்த படிவங்களை எல்லாம் ஸ்கேன் செய்து பி எல் ஓக்களிடம் ஓ டி பி – ஐ மட்டும் பெற்றுக் கொண்டு ஆளே இல்லாத வாக்காளர்களின் படிவங்களில் கையெழுத்து இல்லாமல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட படிவங்கள் முறைகேடாக ஏற்றப்பட்டுள்ளது என கூறினர்.
தகவல் அறிந்து வந்த பரமக்குடி கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் ஆவணங்களை பெற்றுக்கொண்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.



