கன்னியாகுமரி, டிச. 6 –
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கன்னியாகுமரி புனித தூய அலங்கார உபகார மாதா ஆண்டு திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா வரும் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று காலை 6 மணிக்கு தயாரிப்பு திருப்பலியுடன் விழா துவங்கியது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சைக் கொடி பவனி நடை பெற்றது. மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண் டனர்.
திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு பல்வேறு பங்குத்தந்தையர்கள் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரை, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, அன்பிய ஆண்டு விழா, திருச்சப்பர பவனி போன்றவை நடைபெறும்.
13-ம் தேதி காலை 11 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலை மையில் மாலை ஆராதனை மற்றும் மறையுரை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு வாணவேடிக்கையும் புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடைபெறும்.
14ம் தேதி அதிகாலை 4.30க மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடைபெறும். காலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலியை தொடர்ந்து, மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும், மாலை 6 மணிக்கு திருக் கொடியிறக்கம், நற்கருணை ஆசிர் ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அருட்பணியாளர் உபால்டு மரிய தாசன், துணைத் தலைவர் டாலன் டிவோட்டா. செயலாளர் ஸ்டார்வின் பொருளாளர் ரூபன், துணைச் செயலாளர் டெமி, இணை பங்கு தந்தையர்கள் அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்து வருகின்றனர்.



