மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட பிட்னஸ் சேலஞ்ச் #fitness challenge என்ற தலைப்பில் பங்கெடுத்த நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட முழு உடல் பரிசோதனை நடைபெற்றது.
மேற்படி சவாலில் கலந்து கொண்டு உடல் நலத்தை பேணிக்காத்து வரும் 40-க்கும் மேற்பட்ட நேரடி சார்பு ஆய்வாளர்களின் முதல் மாத உடற்பயிற்சி மதிப்பாய்வுக்கான மருத்துவ முகாம் கடந்த (29.03.2025) அன்று நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட மதிப்பாய்விற்காக தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் வைத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் தலைமையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மரு. C. மதன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பாக முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள் . ரகு, . பாரத் பெகெரா மற்றும் . சுரேஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ ஊழியர்கள் மேற்படி சார்பு ஆய்வாளர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, உயரம், எடை போன்ற பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு முழு உடல் மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் . சுனைமுருகன், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் . மயிலேறும்பெருமாள் ஆகியோரும் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.



