நாகர்கோவில், டிச. 1 –
நாகர்கோவில் பள்ளவிளை பகுதியில் வசிப்பவர் மிக்கேல் சேவியர். இவரது மகள் லிவினா (21) பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். வேலை ஏதும் கிடைத்ததால் தற்போது அழகு நிலையம் ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார். மேலும் பல இடங்களில் வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 29ம் தேதி காலையில் லிவினா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது காலையில் திடீரென தனது அறையில் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு நீண்ட நேரம் கதவை திறக்கவில்லை. சிறிது நேரம் கழித்து லிவிவின் சகோதரி ஷைனி என்பவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அறையில் துப்பட்டாவில் லிவினா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது லிவினா ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவ தொடர்பாக தாயார் ஷோபா (46) என்பவர் அளித்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரியான வேலை கிடைக்காத விரக்தியில் லிலினா தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



