சுசீந்திரம், நவ. 22 –
சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன்புதூரை அடுத்த கொத்தன்குளம் கீழத் தெருவை சேர்ந்த இசக்கிதுரை மகள் லெட்சுமி (22). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெய துர்கேஷ் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் லெட்சுமியும், ஜெயதுர்க்கேஷீம் திருமணம் முடிந்து சுமார் 5 மாதங்கள் தேனியில் வசித்து வந்த நிலையில் கணவரின் தாயார் மல்லிகா மருமகள் லெட்சுமியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து லெட்சுமியின் பெற்றோர் தேனிக்கு சென்று லெட்சுமியை கொத்தன்குளத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் லெட்சுமியின் கணவர் ஜெயதுர்கேஷ், மாமியார் மல்லிகா (48) ஆகியோர் சம்பவத்தன்று லெட்சுமியின் வீட்டின் முன்பு வந்து லெட்சுமியை தங்களுடன் அனுப்புமாறு லெட்சுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு லெட்சுமியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஜெயதுர்கேஷ்ம், மல்லிகாவும் சேர்ந்து லெட்சுமி மற்றும் அவரது தந்தை இசக்கி துரையையும் தகாத வார்த்தையால் பேசியதுடன் கையால் முதுகு மார்பில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து லெட்சுமி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட், ஜெயதுர்கேஷ், மல்லிகா ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


