நாகர்கோவில், நவம்பர் 21 –
நாகர்கோவிலில் தலைமை ஆசிரியை தங்கி இருந்த வீட்டில் ரூ.1.50 லட்சத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் கான்வென்ட் பகுதியை சேர்ந்தவர் ரீதாம்மாள் (56). இவர் தற்போது நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள இல்லத்தில் இவர் தங்கி இருக்கிறார். நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய ரீதாம்மாள் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் அவரது அறையின் கதவு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 1.50 லட்சம் மற்றும் செல்போனை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் ரீத்தாம்மாள் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வர வழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியை தங்கி இருந்த வீட்டில் பணம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


