மார்த்தாண்டம், நவ. 18 –
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மாவட்ட அளவில் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். எஸ் பி அறிவுரைப்படி மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி தினசரி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் 95% பேர் ஹெல்மெட் அணிந்து வருகின்றனர்.
இதை போல் சிறுவர்கள் பைக் ஓட்டி வந்தால் அவர்களைப் பிடித்து பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர் நடவடிக்கையால் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இதை போல் ஆட்டோ டிரைவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் நல்ல பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்வசாமியின் பணியை பாராட்டி எஸ்.பி. ஸ்டாலின் நாகர்கோவில் நடந்த விழாவில் சான்றிதழ் வழங்கினார்.



