கன்னியாகுமரி, அக். 23 –
சூரசம்ஹார விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பேசியதாவது: முருக வழிபாட்டின் முக்கியமான நிகழ்வான திருமுருகனுக்கான ஆறு நாள் நோன்பு (கந்தசஷ்டி விரதம்) நேற்று தொடங்கியது. முதல் நாளில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தோவாளை செக்கர்கிரி மலையில் அமைந்திருக்கும் முருகன் கோவிலில் நடைபெற்ற தீப வழிபாட்டில் தோவாளை ஒன்றிய பொறுப்பாளர்களுடன் கலந்து கொண்டோம்.
சித்தர்கள் வழிபட்ட இக்கோவிலின் அமைதியையும் மலையை சுற்றிய இயற்கை அழகையும் அனுபவிக்கும் வாய்ப்பையும், மேலும் அப்பகுதியின் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் இந்நிகழ்வு வழங்கியது.
மேலும் குமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற விழாவான தோவாளை சூரம்பாடு விழா வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழாக்கோலம் பூண்டிருக்கும் தோவாளை பகுதி மக்கள் அனைவருக்கும், உலகெங்கும் வாழும் முருக பக்தர்களுக்கும் விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



