மார்த்தாண்டம், அக். 14 –
மார்த்தாண்டம் அருகே இ பிரண்ட் மூலம் பழகிய நண்பர் ஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் தாக்கப்பட்டார். ஒன்றரை பவுன் நகை பறிக்கப்பட்டது.
முக்காடு மேலவிளையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜின் (24). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் ஈ பிரண்ட் மூலம் இதே மாவட்டத்தைச் சேர்ந்த பென்டர் பென் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நண்பராக பழகி உள்ளனர். தற்பொழுது விடுமுறைக்கு விஜின் ஊருக்கு வந்துள்ளார்.
இதை அறிந்து பென்டர் பென் சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு விஜினை மார்த்தாண்டம் அருகே கல்லு குட்டிக்கு வர அழைத்துள்ளார். விஜின் அங்கு சென்று உள்ளார். பென்டர் பெனும் அவரது நண்பர் நிர்மல் இருந்துள்ளனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளனர்.
விஜின் மறுத்துள்ளார். அப்பொழுது புதருக்குள் மறைந்திருந்த மேலும் இருவரும் அங்கு வந்து விஜினை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். தனது கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து விஜின் அணிந்திருந்த ஒரு பவுன் செயின் மற்றும் அரை பவுன் மோதிரத்தை கழட்டி தர வற்புறுத்தியுள்ளார். இல்லையில் பீர் பாட்டிலால் குத்துவதாக மிரட்டி உள்ளார்.
பின்னர் நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து விஜின் மார்த்தாண்டம் போலீஸ்யில் புகார் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


