கருங்கல், அக். 13 –
கிள்ளியூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு எதிர்கட்சி முன்னாள் தலைவருமாக பொறுப்பில் இருந்தவர் குமரி கோமேதகம் என அழைக்கப்படும் பொன்னப்ப நாடார். அவரது 49 – நினைவு தினம் நேற்று நடந்தது. இதையொட்டி கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் ஜங்சனில் வைத்து அவரது உருவ படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ மற்றும் விஜய் வசந்த் எம்.பி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொன்னப்ப நாடார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பாலவிளையில் உள்ள அவரது நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆஸ்கர் பிரடி, ரெத்தினகுமார், ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜகிளன், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் லைலா ரவிசங்கர், கிள்ளியூர் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயராணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



