வேடசந்தூர், அக். 4 –
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி குஜிலியம்பாறை ஒன்றியம் மல்லபுரம் ஊராட்சியில் வீராசாமிநாதன் அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல் KT மருத்துவமனை டாக்டர் துரைசாமி இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வீரா சாமிநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த முகாமில் எலும்பு தேய்மானம் முதுகுத் தண்டுவடம் மற்றும் தண்டுவடத்தில் வலியில்லா அறுவை சிகிச்சைகள் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு சிறப்பான முறையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் ஒன்றிய செயலாளர் சசி (எ) ராஜலிங்கம் சரவணகுமார், ஐடி வீங்க் பிரதீப் கண்ணன் மல்லபுரம் பகுதி நிர்வாகிகள் சுரேஷ் பழனிச்சாமி பாலசுப்பிரமணியம் பிரபு இசக்கிமுத்து பொன்னுச்சாமி கிருஷ்ணன் அருணாச்சலம் உட்பட்ட மாணவர் அணி சுரேஷ் மற்றும் விஷ்ணு கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



