திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பசும்பொன் நகரை சேர்ந்த S.விக்னேஷ்குமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 11.05.2024 ம்தேதி பணி முடித்துவிட்டு திருச்சி ரோடு தாமரைப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த வாகனம் மோதி பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதன் காரணமாக தமிழ்நாடு காவல்துறை 2017 பேட்ச் காவலர்கள் 38 மாவட்டங்களில் காக்கும் உறவுகள் குழு என்ற பெயரில் 6587 காவலர்கள் ஒன்றிணைந்து 21,69,900 ரூபாய் பணம் வசூலித்து S.விக்னேஷ்குமார் குடும்பத்தாருக்கு வங்கி வைப்பு தொகையாக செலுத்தி அதற்கான வங்கி கணக்கு புத்தகத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் அவர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர். மேலும் அவர் நினைவாக தென்னக்கன்றுகள் வழங்கப்பட்டது.



