நித்திரவிளை, அக். 2 –
குமரி மாவட்டத்தில் உள்ள பைபர் படைகளுக்கு அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. இதை வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு கடத்தி அங்கு அதிக விலைக்கு விற்பது வாடிக்கையாக உள்ளது. இந்த கடத்தலை தடுக்க வேண்டிய குடிமை பொருள் குற்ற பலனாய்வு போலீசார், வருவாய் துறையினர் இதை கண்டு கொள்வதில் என புகார் உள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் மானிய விலை மன்னனை கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மங்காடு ஆற்றுப்பாலம் வழியாக கேரளாவுக்கு படகுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஏற்றிக்கொண்டு ஒரு சொகுசு வாகனம் வருவதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நித்திரவிளை சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், எஸ் எஸ் ஐ அமலதாஸ் ஆகியோர் மங்காடு ஆற்று பாலம் பகுதியில் வந்த சம்பந்தப்பட்ட சொகுசு வானத்தை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அதில் டிரைவர் மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் வாகனத்தை டிரைவருடன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்தவர் மிடாலம் பகுதி சேர்ந்த ஜான் பெஸ்கி (43) என்றும் மார்ஜின் ஃப்ரீ மார்க்கெட் வைத்திருப்பவர் என்றும் தெரிந்தது. தொடர் விசாரணையில் மிடாலம், குறும்பனை பகுதியிலிருந்து மானிய விலை மண்ணெண்ணெய் மீனவர்களிடம் இருந்து ஆயிரம் லிட்டர் விலை கொடுத்து வாங்கி கேரள மாநிலம் பூவார் பகுதியில் உள்ள ஒரு வியாபாரிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வந்ததாகவும் தெரிவித்தார். போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் வாகனத்துடன் குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.



