By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூர் விஐடியில் கிராவிடாஸ் 2025 அறிவுசார் விழா நாளை தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வேலூர் விஐடியில் கிராவிடாஸ் 2025 அறிவுசார் விழா நாளை தொடக்கம்
வேலூர்

வேலூர் விஐடியில் கிராவிடாஸ் 2025 அறிவுசார் விழா நாளை தொடக்கம்

Last updated: September 25, 2025 5:40 pm
September 25, 2025
60 Views
Share
SHARE

வேலூர், செப். 25 –

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கும் கிராவிடாஸ் 2025 அறிவுசார் நிகழ்வில் 207 நிகழ்வுகளும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர் என விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுகையில்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 16-வது ஆண்டாக கிராவிடாஸ் 2025 அறிவுசார் விழா செப்டம்பர் 26 – 28 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வு மாணவர்களின் புதுமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் தளமாக இருந்து வருகிறது. இவ்வாண்டு கிராவிடாஸ் அறிவுசார் விழாவில் 207 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 60-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் முன்கூட்டியே நடந்துள்ளன. மீதமுள்ள 147 நிகழ்வுகள் கிராவிடாஸ் விழாவில் நடைபெறும். மேலும் 84 புதிய நிகழ்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 51 ஹேக்கத்தான், 57 பயிற்சி பட்டறைகள், 24 தொழில்நுட்ப போட்டிகள், 75 புதுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கும். ரோபோ வார், ட்ரோன் ஷோ, கோ கார்ட்டிங் மற்றும் ஏரோகிராப்டர்ஸ், குவாட்காப்டர், கோட் 2 கிரியேட் ஆகிய சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கிராவிடாஸ் நிகழ்வில் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்குவங்கம், டெல்லி, தெலங்கானா மற்றும் ஆந்திரபிரேதசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சுமார் 3000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்தும், 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்தும் கிராவிடாஸ் நிகழ்வில் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

கிராவிடாஸ் விழாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள், ஹேக்கதானில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சுமார் ரூ.30 லட்சம் அளவுக்கு ரொக்கப் பரிசு, கல்வி பயிற்சிக்கான பரிசு கூப்பன்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் ஹேக்கதான் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வு மற்றும் இன்டர்ன்ஷிப் பயிற்சி ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர்களுக்கு தனியாக “கேப்பிடல் ஹன்ட்” என்ற நிகழ்வு நடைபெறுகிறது.

கிராவிடாஸ் தொடக்க நிகழ்வில் அபுதாபி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மஜித் அலி அல் மன்சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கவுரவ விருந்தினர்களாக நியூஸ் 18 நிர்வாக ஆசிரியர் ஆனந்த் நரசிம்மன், மேக்ஸிமஸ் இந்தியா நிறுவனத்தின் பிரவீனா பீமவாரப்பு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சரத்குமார் பச்சே கவுடா, கவுரவ விருந்தினராக நிதி ஆயோக் இயக்குநர் ஷஷாங் ஷா ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று கூறினார்.

பின்னர் கிராவிடாஸ் 2025 நிகழ்வின் ஜெர்சியை வேந்தர் கோ.விசுவநாதன் அறிமுகம் செய்து வைத்தார். விஐடி செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, ரமணி பாலசுந்தரம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் கல்லூரியில் 53வது ஆண்டு விழா
SSTA இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கே வி ,குப்பம் கிராம உதவியாளர்கள் 5 அம்சக் கோரிக்கை
மது பாக்கெட் கடத்திய வந்த இருவர் கைது
எஸ் .ஆர். எம். ஈவென்ட் மேனேஜ்மென்ட் திறப்பு விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்நாடாளுமன்ற தேர்தல்-2024மாநிலம்

“காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன”

May 22, 2024
133 Views
மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்ஸில் பெண்ணின் நகை திருட்டு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றும் விழா
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா
மனிதநேய ஜனநாயக கட்சி ரயில் நிலையம் முற்றுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account